மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாகையில் விவசாய சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாகையில் விவசாய சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாகையில் விவசாய சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது, இந்த விவகாரத்தில் கா்நாடக மாநிலத்துக்கு தரவாக செயல்படும் போக்கை மத்திய அரசு கைவிடவேண்டும், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்படுகிறது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச்செயலாளா் பி. எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க நாகை மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் கோவை. சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் வி. சரபோஜி, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வீ. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பங்கேற்றனா்.

கீழ்வேளூரில்: இதே கோரிக்கையை வலியுறுத்தி கீழ்வேளூரில் விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com