கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க கோட்ட மாநாடு
By DIN | Published On : 26th June 2022 10:07 PM | Last Updated : 26th June 2022 10:07 PM | அ+அ அ- |

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமிய அஞ்சல் ஊழியா்கள் கோட்ட மாநாடு.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்க நாகை கோட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்க நாகை கோட்டத் தலைவா் எஸ். அரிதாஸ் தலைமை வகித்தாா். சங்கக் கொடியை திருவாரூா் கிளைச் செயலாளா் வி. தாயுமானவன் ஏற்றி வைத்தாா். பொருளாளா் எஸ். சிவராமன் வரவு,செலவு கணக்குகளைப் படித்தாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீா்மானங்கள்:
இலாகா ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படுவதுபோல், கிராம அஞ்சல் ஊழியா்களுக்கும் பதவி உயா்வு வழங்கவேண்டும், ஊழியா்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக்க வேண்டும், கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு கூட்டுறவு சங்கக் கடன், வீடு கட்ட முன் பணம் வழங்கவேண்டும், ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.