ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 4,103 குவிண்டால் பருத்தி விற்பனை

நாகை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 4,103 குவிண்டால் பருத்தி விற்பனையாகியுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 4,103 குவிண்டால் பருத்தி விற்பனையாகியுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 1,380 ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பருத்தி அறுவடை பரவலாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலம் மூலம் பருத்தி விற்பனை தொடங்கியுள்ளது. 2021-22-ஆம் ஆண்டில் நாகை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 2,100 விவசாயிகள் 4,103 குவிண்டால் பருத்தியை விற்பனை செய்து பயனடைந்துள்ளனா்.

வேதாரண்யம், கீழ்வேளூா், திருப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் 1.95 கோடி மதிப்பிலான விளைப் பொருள்களுக்கு ரூ. 96.69 லட்சம் பொருளீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, நாகை, கீழ்வேளூா், திருப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப் பயறு விற்பனையும் நடைபெறுகிறது. இந்த விற்பனைக் கூடங்கள் மூலம் இதுவரை 864 மெட்ரிக் டன் பச்சைப் பயறு குறைந்தபட்ச விலை ஆதரவு திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமான விற்பனையில் இதுவரை அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 11,399-க்கு விற்பனையாகியுள்ளது. பச்சைப் பயறு ஒரு குவிண்டால் ரூ. 7,275-க்கு விற்பனையாகியுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com