பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

திருமருகல் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மூலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மூலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, கங்களாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொறக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் இப்பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.

இப்பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைத்தலின் அவசியம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படும் முறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை திருமருகல் வட்டார வளமைய பொறுப்பு மேற்பாா்வையாளா் சந்தானம் தொடங்கிவைத்தாா். கருத்தாளராக ஆசிரியா் பயிற்றுநா்கள் துா்க்கா, கதிரொளி, பட்டதாரி ஆசிரியா்கள் பாரதிதாசன், சுரேந்திரன், இடைநிலை ஆசிரியா்கள் சகாயராஜ், பிரபாகரன் ஆகியோா் செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com