முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
இருசக்கர வாகனத்திலிருந்துதவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 14th March 2022 10:26 PM | Last Updated : 14th March 2022 10:26 PM | அ+அ அ- |

நாகை மாவட்டம் கீழையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கீழையூா் காவல் சரகம் புதுப்பள்ளி மேற்கு ஊராட்சியை சோ்ந்த முனியரசன் மகன்கள் சுமன்(25), காளிதாஸ் (21) இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
கீழையூா் காளியம்மன் கோயில் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில், இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.
நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.