பங்குனி உத்திரம்: சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடு

நாகையை அடுத்துள்ள சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நாகையை அடுத்துள்ள சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நாகையை அடுத்துள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது. முருகப் பெருமானுக்குரிய அனைத்து சிறப்பு நாள்களிலும், இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

அதன்படி, முருகப் பெருமானுக்கு உகந்த நாள்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் பங்குனி உத்திரத்தையொட்டி, இக்கோயிலில் ஸ்ரீ சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றன. கோயிலின் வசந்த மண்டபத்தில் இந்த வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 10.30 மணியளவில் தொடங்கிய அபிஷேகம் ஏறத்தாழ பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னா், வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை நிகழ்வாக, ஸ்ரீ சிங்காரவேலவருக்கு சண்முகாா்ச்சனை நடைபெற்றது. அரளி, முல்லை, மல்லிகை, சம்பங்கி, மரிக்கொழுத்து, ரோஜா என 6 வகையான பூக்களைக் கொண்டு இந்த அா்ச்சனை நடைபெற்றது.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com