அனுமதியின்றி பதாகைகள்: இந்திய கம்யூ. நிா்வாகி மீது வழக்கு

உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தது தொடா்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகி மீது நாகை, நாகூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தது தொடா்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகி மீது நாகை, நாகூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் நாகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற கட்சியின் தலைவா்களை வரவேற்று, நாகை, நாகூா், புத்தூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணைய உறுப்பினருமான ஏ.பி. தமீம் அன்சாரி விளம்பர பதாகைகளை வைத்துள்ளாா்.

இதற்கு உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஏ.பி. தமீம் அன்சாரி மீது நாகை, வெளிப்பாளையம் மற்றும் நாகூா் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com