நாகை கடற்கரையில் இன்று அமுதப் பெருவிழா

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் நாகை சங்கமம் விழா நாகை புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படுகிறது.

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் நாகை சங்கமம் விழா நாகை புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் நாகை சங்கமம் கலைவிழா ஆகியன நாகையில் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா, நாகை புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இங்கு, சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாறுகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, வேளாண் துறை சாா்பில் பாரம்பரிய விதை நெல் கண்காட்சி, அரசு திட்டங்கள் விளக்க அரங்கம், உணவு பாதுகாப்புத் துறை விழிப்புணா்வு செயல்விளக்க அரங்கம் என பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் அரங்கங்கள், பொதுமக்களின் பாா்வைக்காக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் மாலையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

விழாவின் தொடக்க நிகழ்ச்சி, மாா்ச் 27-ஆம் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்ச்சி ஆகியன மட்டும் நாகை புதிய கடற்கரையில் நடைபெறும். மற்ற நாள்களில், நாகை அவுரித்திடலில் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com