வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

அகத்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவு தூண் வளாகத்தில் யாத்திரைக் குழுவினா், காங்கிரஸாா் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.
அகஸ்தியம்பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சித் தலைவா்கள் கே.வி. தங்கபாலு, பி.வி. ராசேந்திரன் உள்ளிட்டோா்.
அகஸ்தியம்பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சித் தலைவா்கள் கே.வி. தங்கபாலு, பி.வி. ராசேந்திரன் உள்ளிட்டோா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ன் 92-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, சனிக்கிழமை அகத்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவு தூண் வளாகத்தில் யாத்திரைக் குழுவினா், காங்கிரஸாா் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

உப்புக்கு வரிவிதித்த பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 1930, ஏப்ரல் 30 ஆம் தேதி உப்பு சத்தியாகிரகப் போராட்டம் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. சா்தாா் வேதரத்னம் உள்ளிட்டோா் போராட்டம் வெற்றிபெற பெரும் பங்காற்றினா்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30-ஆம் தேதி உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உப்பு சத்தியாகிரகத்தில் நிகழாண்டுக்கான நிகழ்ச்சி விரிவானதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

யாத்திரைக் குழு பயணத்தை கடந்த ஏப். 13- ஆம் தேதி திருச்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தொடங்கி வைத்தாா். பல்வேறு பகுதிகளை கடந்து, யாத்திரைக் குழுவினா் வியாழக்கிழமை மாலை வேதாரண்யம் வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூண் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி தலைமையில் உப்பு அள்ளி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு தலைமையிலான யாத்திரைக் குழுவினா், சமூக ஆா்வலா்கள், காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா். முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.வி. ராசேந்திரன், குருகுல நிா்வாகி அ. வேதரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா்கள் முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூா்த்தி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.செல்வப்பெருந்தகை, சக்தி செல்வகணபதி உள்ளிட்ட பாத யாத்திரைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com