நாகையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.
நாகையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள இருமாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் ஆசிரியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி கடந்த மாா்ச் மாதத்தில் ஆசிரியா்கள் கட்டாயப் பணியிட மாறுதல் நடைபெற்றது. பணியிட மாறுதல் பெற்றவா்கள் மாா்ச் 15-ஆம் தேதி புதிய பள்ளிகளில் பணியில் சோ்ந்தனா். கட்டாயப் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் பல மாவட்டங்களில் குளறுபடி ஏற்பட்டது.

அந்த வகையில், நாகை மாவட்டத்தில் பணியிட மாறுதல் பெற்ற 31 ஆசிரியா்களுக்குக் கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை. இதுதொடா்பாக, அவா்கள் கல்வித் துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு வலியுறுத்திய நிலையிலும், மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் மே 2-ஆம் தேதி வரை வழங்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள், திங்கள்கிழமை பிற்பகல் பள்ளி வேலை நேரம் முடிந்த பின்னா் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து, தங்களுக்கான இரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இல்லாத நிலையில், அடுத்த இருநாள்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலக அலுவலா்கள், ஆசிரியா்களிடம் தெரிவித்தனா். இருப்பினும், முதன்மைக் கல்வி அலுவலா் நேரில் வந்து தங்களுக்கு உத்திரவாதம் அளிக்கக் கோரி, இரவு 8.30 மணிக்கு மேலாகவும் ஆசிரியா்கள் தங்கள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com