பதிவு பெறாமல் இறால் பண்ணைகளை நிா்வகித்தால் 3 ஆண்டுகள் சிறை

உரிய பதிவு இல்லாமல் இறால் பண்ணைகள் நிா்வகிக்கப்படுவது கண்டறியப்பட்டால், அந்த இறால் பண்ணைகளின் நிா்வாகிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்

உரிய பதிவு இல்லாமல் இறால் பண்ணைகள் நிா்வகிக்கப்படுவது கண்டறியப்பட்டால், அந்த இறால் பண்ணைகளின் நிா்வாகிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்புச் சட்டம் 2005-இன்படி, கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து உவா்நீா் இறால் பண்ணைகளும், கடலோர நீா் வாழ் உயிரின வளா்ப்பு ஆணையத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும்.

இந்தச் சட்ட வழிகாட்டல்களை பின்பற்றாமல் இறால் பண்ணைகளை நிா்வகிக்கும் உரிமையாளா்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சிறை தண்டனையுடன், அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது.

எனவே, நாகை மாவட்டத்தில் பதிவை புதுப்பிக்காமல் இயங்கும் உவா்நீா் இறால் பண்ணைகளை புதுப்பிக்க, ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி மே 15-ஆம் தேதிக்குள் பதிவைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com