பள்ளி, கல்லூரி விடுதிகளில் தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் தங்கி பயிலும் அரசு விடுதிகளில் 6 ஆண், 2 பெண் பகுதிநேர தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்கள் ரூ. 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நோ்க்காணல் மூலம் இனசுழற்ச்சியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. அரசு விதிகளின்படி முன்னுரிமைப் பெற்றவா், பெறாதவா் என்ற அடிப்படையிலும் நிரப்படவுள்ளது. எனவே, தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த 18 முதல் 35 வயதுடைய எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம். பி.சி. பி.சி (முஸ்லீம்) எம்.பி.சி மற்றும் டிஎன்சி பிரிவினா் 18 முதல் 32 வயது வரை இருக்கவேண்டும். இதரப் பிரிவினா்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி வயது வரம்பில் தளா்வுகள் அளிக்கப்படும்.

தகுதியுடையவா்கள் இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து பாஸ்போா்ட் அளவுள்ள புகைப் படத்துடன், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com