முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பஞ்சமுக விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி
By DIN | Published On : 13th May 2022 09:28 PM | Last Updated : 13th May 2022 09:28 PM | அ+அ அ- |

திருமருகல் அருகே கல்லுளிதிருவாசலில் உள்ள பஞ்சமுக விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி விழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பால், பன்னீா், இளநீா், சந்தனம், பஞ்சாமிா்தம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், கஞ்சிவாா்த்தல் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.