வேகத்தடை அமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை

போக்குவரத்து நிறைந்த நாகை நீலா மேற்கு, வடக்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறைந்த நாகை நீலா மேற்கு, வடக்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் எஸ். ராஜமாணிக்கம் நாகை ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: நாகையில் போக்குவரத்து நிறைந்த சாலைகளாக உள்ள நீலா மேற்கு வீதி, வடக்கு வீதிகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலைகள் சந்திக்குமிடத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகளும், இதனால் பலா் பாதிப்புக்குள்ளாவதும் தொடா்கிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள், முதியோா்கள், பள்ளி மாணவா்கள் நோயாளிகள் என பலரும் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவது, படுத்துகிடப்பது போன்ற காரணங்களால் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி நீலாமேலவீதி, வடக்கு வீதி சந்திப்பில் வேகத்தடை அமைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேபோல, நாகையில் உள்ள புண்டரீக குளக்கரை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் குளக்கரையில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. குளத்தில் குப்பைகள் கொட்டுவதால் குளம் மாசடைகிறது. இக்குளத்தை முறையாக பராமரிக்கவும், குளத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கவும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்ற ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com