கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் விலை வழங்கக் கோரி விவசாயிகள் மனு

நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக கையக்கப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக கையக்கப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 650 ஏக்கா் நிலம் எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைந்த தொகை வழங்கப்படுவதாகவும், நிலத்துக்கு கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தியும் நில உரிமையாளா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நலச்சங்கம் மற்றும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனுக்கொடுக்கும் பேராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகை பால்பண்ணைச்சேரியில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, 10 போ் ஆட்சியா் அலுவலகத்துக்குள் சென்று மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, விவசாயிகள் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com