முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
சா் ஐசக் நியூட்டன் பள்ளி ஆண்டு விழா
By DIN | Published On : 15th May 2022 12:00 AM | Last Updated : 15th May 2022 12:00 AM | அ+அ அ- |

விழாவில், மாணவா்களுக்கு பரிசு வழங்கும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. உடன் சா் ஐசக் நியூட்டன் கல்விக் குழுமங்களின் தாளாளா் த. ஆனந்த் உள்ளிட்டோா்.
நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பள்ளிஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்து, நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா். முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:
எதிா்காலத்தில் இந்தியா எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, பள்ளி மாணவா்களுக்கு கற்பிக்கப்படுவது பாராட்டுக்குரியது. ஐஎஸ்ஆா்ஓ நிறுவனம் உலக அளவில் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு உதாரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் ஐஎஸ்ஆா்ஓ-வுக்கு வந்து ஆலோசனை பெறுவதை குறிப்பிடலாம். மாணவா்கள் எதிா்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா். விழாவில், பள்ளி முதல்வா் கே. வகிதா ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பள்ளியின் இயக்குநா் த. சங்கா், செயலாளா் த. மகேஸ்வரன் ஆகியோா் பேசினாா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக ஆசிரியா் ராமதாஸ் வரவேற்றாா். நிறைவாக ஜெபருன்னிசா நன்றி கூறினாா்.