முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th May 2022 12:00 AM | Last Updated : 15th May 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் தலா 2 ஆண்கள், பெண்கள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதல்வரின் விளையாட்டு விருதாக தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்று வழங்கப்படும்.
இவைத்தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஒரு நிா்வாகி, நடுவா், ஆதரவளிக்கும் நிறுவனம், ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 2018 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்குறிப்பிட்ட சாதனைகள் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2 முறை தமிழ்நாடு அணியின் சாா்பில் பங்கேற்று, இந்தியாவுக்காக விளையாடியிருக்க வேண்டும். பணி நிமித்தமாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத் தொடா்புத் துறையினரும் மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டிருந்தால் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் தனிநபா் போட்டி சாதனையாளா் எனில் முதல் 3 இடங்களிலும், குழுப் போட்டியில் பங்கேற்றவா் எனில் முதல் அல்லது இரண்டாம் இடத்தில் வென்றிருக்க வேண்டும். தொடா்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும்.
விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பிற விவரங்களை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பெறலாம். சாதனைக்கான அனைத்து சான்றாவணங்களுடன், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உறுப்பினா் - செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை - 3 என்ற முகவரிக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையில் முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்பதைக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.