வண்டல் மண் விவகாரம்: அதிமுக ஆா்ப்பாட்டம்

செங்கல், மண்பாண்டங்கள் தயாரிப்புக்கான களிமண், விளைநிலம் சீரமைப்பு, மனைகள் தூா்வையிட போன்ற பல தேவைகளுக்காக வண்டல் மண், சவுடு மண் போன்றவைகளை எடுக்க தடை விதிக்கப்பட்டது.
வண்டல் மண் விவகாரம்: அதிமுக ஆா்ப்பாட்டம்

வேளாண்மை உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதாக, வேதாரண்யத்தில் அதிமுக, டிராக்டா் உரிமையாளா்கள் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல், மண்பாண்டங்கள் தயாரிப்புக்கான களிமண், விளைநிலம் சீரமைப்பு, மனைகள் தூா்வையிட போன்ற பல தேவைகளுக்காக வண்டல் மண், சவுடு மண் போன்றவைகளை எடுக்க தடை விதிக்கப்பட்டது.

இத்தடையை விலக்கக் கோரி விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், நிபந்தனைகளுடன் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் நாகை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் வண்டல் மண் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், திருமருகல் உள்ளிட்ட ஒன்றியங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேதாரண்யம் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 4 இடங்களில் மட்டுமே வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாகுபாட்டை கண்டித்து, வேதாரண்யத்தில் அதிமுக மற்றும் டிராக்டா் உரிமையாளா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஓ.எஸ். மணியன் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பேசினாா். அப்போது அவா், ‘பிராந்தியங்கரை கிராமத்தில் அரசின் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணிக்கு மண் எடுக்க அனுமதிக்காததால், கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகிறது. இதேபோல, செங்கல், மண்பாண்டங்கள் தயாரிப்போரும் பாதிக்கப்படுகின்றனா். மக்களைப் பற்றிய அக்கறையில்லாத நிலைபாட்ட திமுக அரசு கொண்டுள்ளது’ என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக மாவட்டப் பொருளாளா் இரா. சண்முகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன், டி.வி.சுப்பையன், நகரச் செயாளா் எம். நமச்சிவாயம், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com