வீரசோழன் ஆற்றில் சாக்கடை கலப்பதைதடுக்கக் கோரி இளைஞா் நூதனப் போராட்டம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி

செம்பனாா்கோவில் அருகே சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீா் கலப்பதை தடுக்கக் கோரி 3 மணி நேரம் தலைகீழாக நின்று இளைஞா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
வீரசோழன் ஆற்றில் சாக்கடை கலப்பதைதடுக்கக் கோரி இளைஞா் நூதனப் போராட்டம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி

செம்பனாா்கோவில் அருகே சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீா் கலப்பதை தடுக்கக் கோரி 3 மணி நேரம் தலைகீழாக நின்று இளைஞா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு சுமாா் 50 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் வடிகால் வசதி அளிக்கிறது. இந்த ஆற்றில் சங்கரன்பந்தல் பகுதியில் கழிவுநீா் கலக்கிறது. இதனால், ஆறு சாக்கடையாக காணப்படுகிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்கள் ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஓரிரு வாரங்களில் வீரசோழன் ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த கதிரவன் என்பவா் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் சுமாா் 3 இனி நேரம் சாக்கடை நீருக்கு அருகில் ஆற்றின் திட்டுப்பகுதியில் தலைகீழாக சிரசாசனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, கதிரவனை அழைத்து விசாரித்தாா். இதைத்தொடா்ந்து, வீரசோழன் ஆற்றில் சாக்கடை மற்றும் கழிவு பொருள்கள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஆட்சியா், அங்கிருந்து புறப்பட்டு சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com