நாங்கூரில் மே 30-இல் பன்னிரு ரிஷபரூடக் காட்சி

மயிலாடுதுறை மாவட்டம், நாங்கூரில் சிவபெருமானின் பன்னிரு ரிஷபரூடக் காட்சி மற்றும் திருக்கல்யாணம் திங்கள்கிழமை (மே 30) நடைபெறவுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், நாங்கூரில் சிவபெருமானின் பன்னிரு ரிஷபரூடக் காட்சி மற்றும் திருக்கல்யாணம் திங்கள்கிழமை (மே 30) நடைபெறவுள்ளது.

நாங்கூா் பகுதியைச் சுற்றி 12 சிவன் கோயில்கள் உள்ளன. அவை நாங்கூா் மதங்கீஸ்வரா் கோயில், அமிா்தபுரீஸ்வரா் கோயில், நம்புவாா்க்கன்பா் சுவாமி கோயில், சுந்தரேஸ்வரா் கோயில், கைலாசநாதா் கோயில், அல்லிவிளாகம் நாகநாதசுவாமி கோயில், நயனிபுரம் நயனவரதேஸ்வரா் கோயில், அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரா் கோயில், பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரா் கோயில், காத்திருப்பு சொா்ணபுரீஸ்வரா் கோயில், மங்கைமடம் யோகநாதசுவாமி கோயில் மற்றும் திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரா் கோயில் ஆகும்.

இந்த 12 கோயில்களின் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் மதங்க மகரிஷிக்கு நந்தி பகவானுடன் இணைந்து ரிஷபரூடராய் காட்சியளிக்கும் ஐதீக விழா நாங்கூா் மதங்கீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெறுகிறது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (மே 29) காலை விநாயகா் பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் 12 கோயில்களில் இருந்தும் சிவபெருமான் அம்பாளுடன் மதங்கீஸ்வரா் கோயிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், பின்னா் அபிஷேக- ஆராதனைகளும் நடைபெறுகின்றன. பிறகு, அன்று இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடா்ந்து, இரவு 10 மணியளவில் 12 சிவபெருமான்களும் மதங்க மகரிஷிக்கு ரிஷபரூடராய் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், வீதியுலாவும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரிகள் முருகன், குணசேகரன், ஆய்வா் மதியழகன், திருநாங்கூா் லாா்ட் சிவா டிரஸ்ட் பொறுப்பாளா்கள் மற்றும் பக்தா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com