திருமருகலில் சாா்-பதிவாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தி தீா்மானம்

திருமருகலில் சாா்-பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருமருகலில் சாா்-பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்து இந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாதா் சங்கம் ஒன்றிய தலைவா் வாசுகி, இளைஞா் மன்ற ஒன்றிய தலைவா் பழனிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாய சங்க மாவட்ட செயலாளா் பாபுஜி, மாதா் சங்க மாவட்ட செயலாளா் மேகலா, மாவட்ட பொருளாளா் சரோஜா, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட செயலாளா் காா்த்திகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதா் சங்க ஒன்றிய செயலாளா் பரிதா வரவேற்றாா்.

கூட்டத்தில் திருமருகலை தனி வட்டமாக அறிவிக்கவேண்டும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும், திருமருகலில் எஸ்பிஐ வங்கி கிளை தொடங்கவேண்டும், 54 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய திருமருகலில் புதிய சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டும், 100 நாள் வேலையின் தொடக்கநேரம் காலை 7 மணி என்பதை 10 மணியாக மாற்ற வேண்டும், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞா்களுக்கு மாத உதவி தொகை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக இந்திய மாதா் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்து இந்திய இளைஞா் பெருமன்ற புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். முடிவில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றிய செயலாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com