ஆவின் கொள்முதல் நிலையம் அமைக்க பரிந்துரைக்க கோரி முதல்வரிடம் மனு

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் அரசு ஆவின் பால் கொள்முதல் நிலையம் அமைக்க பரிந்துரைக்க கோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் அரசு ஆவின் பால் கொள்முதல் நிலையம் அமைக்க பரிந்துரைக்க கோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூா்வாரும் பணிகளை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதன் ஒரு பகுதியாக, கீழ்வேளூா் வட்டம், கருவேலங்கடையில், கல்லாா் வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது, முதல்வரிடம் சிக்கல் ஊராட்சித் தலைவா் ஆா். விமலா அளித்த கோரிக்கை மனு:

பொரவாச்சேரி, சங்கமங்களம், தேமங்கலம், ஆபரணதாரி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சிக்கல் ஊராட்சியில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இதில் பெரும்பான்மையினா் விவசாயம் மற்றும் அதுசாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். 1000-க்கும் மேற்பட்டபெண்கள் கறவை மாடுகள் வளா்ப்பில் ஈடுபட்டு, பால் உற்பத்தி செய்து வருகின்றனா். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பால் தனியாரிடம் விற்பனை செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், ஆவின் பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறுவா்.

எனவே தமிழக முதல்வா் சிக்கல் ஊராட்சியில் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை அமைக்க பரிந்துரை செய்யவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்ற முதல்வா் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com