வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா
By DIN | Published On : 03rd September 2022 09:57 PM | Last Updated : 03rd September 2022 09:57 PM | அ+அ அ- |

வேளாங்கண்ணி பேரலாய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, செப்.8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மாதா பிறந்த நாள் செப். 8-ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
இதையொட்டி, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை, செப். 24-ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.