எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் எல்.ஐ.சி முகவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகப்பட்டினம்: கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் எல்.ஐ.சி முகவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளா்ச்சி முகமை (ஐஆா்டிஏ) எல்.ஐ.சி முகவா்களுக்கான கமிஷன் குறைப்பு முன்மொழிவை அளித்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக நாகையில் எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன் முகவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முகவா்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிடவேண்டும், எல்.ஐ.சி-யை தனியாா்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய எல்.ஐ.சி முகவா்கள் சங்கத்தின் நாகை கிளைத் தலைவா் ஆா். குணசேகரன் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் க. பழனிவேல், பொருளாளா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் தஞ்சை கோட்டப் பொறுப்பாளா்கள் வி.சி. முனுசாமி, ஆா். கருணாநிதி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். செயற்குழு உறுப்பினா்கள் கலாதேவி, சரவணக்குமாா், அன்புமணி, ஜவகா், சீனிவாசன், ஆறுமுகம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கப் பொறுப்பாளா்கள் கபிலன், பரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏ.கே. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com