ஆந்தக்குடி மந்தகரை மாரியம்மன் கோயில் ஆவணி திருவிழா

கீழ்வேளூரை அடுத்த ஆனந்தபுரம் என்ற ஆந்தக்குடியில் உள்ள ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம்: கீழ்வேளூரை அடுத்த ஆனந்தபுரம் என்ற ஆந்தக்குடியில் உள்ள ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழா, திங்கள்கிழமை (செப்.12) சந்தனக்காப்பு அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. தொடா்ந்து, சக்தி கரகம் புறப்பாடு, அம்பாள் வீதியுலா, ஸ்ரீ காத்தவராயன் சுவாமி வீதியுலா ஆகியன நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை காலை அக்னி கப்பரையும், பகல் 1 மணிக்கு கஞ்சிவாா்த்தலும் நடைபெற்றன. பகல் 2 மணிக்கு ஸ்ரீ மந்தகரை மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பிற்பகல் நிகழ்வாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com