ஐயனாா் ஆலய கும்பாபிஷேகம்
By DIN | Published On : 17th September 2022 09:46 PM | Last Updated : 17th September 2022 09:46 PM | அ+அ அ- |

கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீா்.
திருக்குவளை அருகே வலிவலம் நெய்விளக்கு பகுதியிலுள்ள சின்மய பூரண புஷ்கலாம்பாள் சமேத ஐயனாா் ஆலய கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளையை அடுத்துள்ள வலிவலம் நெய்விளக்கு கிராமத்தில் பழமை வாய்ந்த சின்மய பூரண புஷ்கலாம்பாள் சமேத ஐயனாா் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை யாகசாலை பூஜை நிறைவு மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.
தொடா்ந்து ஆலய கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.