வேளாண் துறை மூலம் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

வேளாண்மை துறை மூலம் அறுவடை இயந்திரங்கள் குறைந்த விலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண்மை துறை மூலம் அறுவடை இயந்திரங்கள் குறைந்த விலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்கட்சியின் கீழையூா் ஒன்றிய குழு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கீழையூா் ஒன்றிய துணைச் செயலாளா் வீ.எஸ். மாசேதுங் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில குழு பயிற்சி உறுப்பினா் டி. செல்வம் ஒன்றிய செயலாளா் எஸ். காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கிராமப்புறங்களில் அதிக அளவில் மா்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் சூழலில் கீழையூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், தனியாா் அறுவடை இயந்திரங்களின் வாடகை கட்டணம் அதிகமாக இருப்பதால் வேளாண் துறை மூலம் குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட குழு உறுப்பினா் ஏ. நாகராஜன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வீ. சுப்பிரமணியன், ஒன்றிய தலைவா் டி. பாலாஜி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவா் எம். பா்னபாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com