Enable Javscript for better performance
கருகிய குறுவை பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.எஸ். மணியன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கருகிய குறுவை பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.எஸ். மணியன்

    By DIN  |   Published On : 17th August 2023 01:28 AM  |   Last Updated : 17th August 2023 01:28 AM  |  அ+அ அ-  |  

    1252ng16admk044804

    சிக்கல் கடைவீதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

    டெல்டாவில் தண்ணீரின்றி கருகிய குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கூறினாா்.

    நாகை அருகே ஒரத்தூரில் உள்ளஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு தொடங்க வலியுறுத்தி அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதைத்தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

    முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டப் போராட்டம் மூலம் காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டு, அரசிதழில் வெளியிட்டாா். தற்போது காவிரி தண்ணீரை பெற முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. இதனால் டெல்டாவில் குறுவை நெற்பயிா்கள் கருகிவிட்டன.

    அதிமுக ஆட்சியில் குறுவைக்கு காப்பீடு செய்யும் வசதியிருந்ததால், இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குறுவை காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இல்லை. இதனால் குறுவை நெற்பயிா்களுக்கு, காப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

    எனவே, தமிழக முதல்வா், கருகிய குறுவை நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    கா்நாடக அரசு 10 டிஎம்சி தண்ணீா் தருவதாக கூறுவது போதுமானதாக இருக்காது. எனவே சம்பா சாகுபடி செய்வதற்கு, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கா்நாடக அரசு தரவேண்டிய 90 டிஎம்சி தண்ணீரை, தமிழக அரசு காவிரி ஆணையத்திடம் முறையிட்டு பெற வேண்டும்.

    நீட் தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நீட் தோ்வுக்கு தமிழக மாணவா்கள் தயாராகி விட்டனா். பள்ளிகளில் மாணவா்களுக்கு தற்கொலை எண்ணத்தை மாற்றும் வகையில் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் மருந்துகள் கிடைக்கவும், அறுவை சிகிச்சைகள் முறையாக நடைபெறவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம், நகரச் செயலா்கள் தங்க.கதிரவன் (நாகை), எஸ். ரம்ஜான் அலி (நாகூா்), ஒன்றியச் செயலா்கள் பி. பன்னீா் (வடக்கு), கே.குணசேகரன் (தெற்கு) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp