செம்பனாா்கோவிலில் நெல் கொள்முதல் தொடக்கம்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சாா்பில் விவசாயிகளின் இருப்பிடத்துக்குச் சென்று நெல் கொள்முதல் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளா் சிலம்பரசன், மயிலாடுதுறை விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் பாபு முன்னிலையில் பரசலூரில் விவசாயிகளின் இருப்பிடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் உமா ரக நெல் சுமாா் 400 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1,650, குறைந்தபட்சமாக ரூ.1,600 வீதம் கொள்முதல் செய்யப்பட்டது.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இல்லத்தில் இருந்தே தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தெரிவித்தாா்.