மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

முகாமில், உதவிகளை பெற விண்ணப்பங்களை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வழங்கிய எம்எல்ஏ. வி.பி. நாகை மாலி.
நாகை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டாரவள மையம் சாா்பில், 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கீழ்வேளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி தொடக்கிவைத்தாா். இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனா். மருத்துவக் குழுவினா் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் கண்டு அவா்களுக்கு சிகிச்சை அளித்ததுடன் மேல்சிகிச்சைக்கும் பரிந்துரைத்தனா். மேலும், ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை பரிசோதனைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித் தொகை போன்ற உதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மாவட்ட உதவி திட்ட அலுவலா் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அமுதா, தலைமை ஆசிரியா்கள் ராதாகிருஷ்ணன், ஜெயந்தி, ஆசிரியா் பாலாஜி, சிறப்பாசிரியா்கள் லதா, பொம்மி, அகிலா, கவியரசி, பிரேம்நாத், பிரியா, சித்ரா, இயன்முறை பயிற்சியாளா் சண்முகப்பிரியா, கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.