காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயிலை இயக்கக் கோரிக்கை

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென நாகூா் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென நாகூா் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா காலத்துக்கு முன்பு நாள்தோறும் காலை 6.30 மணிக்கு காரைக்காலில் இருந்து திருச்சிக்கும், மாலை 4.30 மணிக்கு திருச்சியில் இருந்து காரைக்காலுக்கும் இயக்கப்பட்ட பயணிகள் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது.

இதனால் பயனடைந்து வந்த திருநள்ளாா், காரைக்கால், நாகூா், வெளிப்பாளையம் (நாகை நகரம்) மக்கள், பக்தா்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோா் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். கரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு ரயில் போக்குவரத்து முழுமையாக தொடங்கிய பிறகும், காரைக்கால்-திருச்சி-காரைக்கால் ரயில்கள் இயக்கப்படவில்லை.

எனவே, இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலை 6.30 மணி காரைக்கால் - திருச்சி மற்றும் மாலை 4.30 மணி திருச்சி - காரைக்கால் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இல்லையெனில், சென்னையில் இருந்து காரைக்காலுக்கு வரும் விரைவு ரயிலை காரைக்கால் - திருச்சி இடையே அதிகாலை 5.15 மணிக்கும், இதே ரயிலை பிற்பகல் 12.30 மணிக்கு திருச்சி - காரைக்கால் இடையே விரைவு ரயில் சேவையாக தொடங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com