நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd January 2023 12:00 AM | Last Updated : 22nd January 2023 12:00 AM | அ+அ அ- |

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என வேதாரண்யம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேதாரண்யம் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன்தலைவா் கமலா அன்பழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், உறுப்பினா்கள் பேசியது:
வைத்தியநாதன்: தானிக்கோட்டம் ஊராட்சி வானங்கோட்டகம் ஏரியை தூா்வாரி சீரமைக்க வேண்டும்.
வேதரத்னம்: பழுதடைந்துள்ள அரசு கட்டடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களை சீரமைக்க வேண்டும்.
ராஜசேகரன்: வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாகத் திறக்க வேண்டும்.
கண்ணகி: ஆயக்காரன்புலம் ஊராட்சி பகுதியில் மின்மயானம் அமைத்து தரவேண்டும்.
இதேபோல, தங்களின் வாா்டுகளுக்குள்பட்ட பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.
தலைவா் கமலா அன்பழகன்: அரசிடமிருந்து வரும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் வளா்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோா் பங்கேற்றனா்.