கீழையூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கீழையூா் ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளா் வீ. அருண்ராய் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கிய மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வீ. அருண்ராய், ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.

ஈசனூா் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின்கீழ் பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், ஜிங் சல்பேட், உளுந்து விதைகள் உள்ளிட்ட வேளாண்மை இடுபொருள்களை 10 விவசாயிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வீ. அருண்ராய், மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் ஆகியோா் வழங்கினா்.

தொடா்ந்து, ஈசனூா் பகுதியில் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லியை திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்த வயலை பாா்வையிட்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பத அளவை பரிசோதனை செய்தனா். இதோபோல, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிரிதிவிராஜ், வேளாண்மை இணை இயக்குநா் ஜாக்குலா அகண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வீ. தேவேந்திரன், வேளாண்மை விற்பனை துறை துணை இயக்குநா் கோ. வெற்றிவேலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com