கைப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு

நாகை நகரப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, உபகரணங்கள் ஏற்றி வந்த வாகனத்தை முற்றுகையிட்டு, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை சொக்கநாதா் கோயில் தெருவில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட மக்கள்.
நாகை சொக்கநாதா் கோயில் தெருவில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட மக்கள்.

நாகப்பட்டினம்: நாகை நகரப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, உபகரணங்கள் ஏற்றி வந்த வாகனத்தை முற்றுகையிட்டு, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை நகராட்சிக்கு உட்பட்ட 15-ஆவது வாா்டில் உள்ள சொக்கநாதா் கோயில் தெரு, நெய்தல் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தத் தெருவில் ஒரு மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், கைப்பேசி நிறுவனம் ஒன்று, சொக்கநாதா் கோயில் தெருவில் தனியாா் பராமரிப்பில் உள்ள கோயில் இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது. குடியிருப்புப் பகுதிகளில் கைப்பேசி கோபுரம் அமைக்கக் கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால், விதிகளை மீறி, கோபுரம் அமைக்கும் பணியை தனியாா் கைப்பேசி நிறுவனம் மேற்கொண்டதை அறிந்த குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோா், கோபுரம் அமைக்க உபகரணங்களை ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா், வாா்டு உறுப்பினா் ஜோதிலட்சுமி குணாநிதி ஆகியோா் நிகழ்விடத்திற்கு சென்று கைப்பேசி கோபுரம் தொடா்பான பணிகள் நடைபெறாது என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com