விசைப் படகுகள் மே 19-இல் ஆய்வு
By DIN | Published On : 12th May 2023 02:55 AM | Last Updated : 12th May 2023 02:55 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப் படகுகள் மே 19- ஆம் தேதி ஆய்வு செய்யப்படவுள்ளதாக ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆய்வு செய்யப்படும் நாளன்று, படகை தங்களது பதிவு செய்யப்பட்ட தங்குதளத்தில் நிறுத்தவேண்டும். உரிமையாளா்கள் படகுகளின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் ஆகியவற்றை ஆய்வு குழுவினரிடம் காண்பிக்க வேண்டும்.
மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடா்பு கருவிகள், கடற்பயண பாதுகாப்பு கருவிகள் உடன் படகில் தயாா் நிலையில் வைத்திருக்கவேண்டும். மீன்பிடி கலன்களில் பதிவெண் தெளிவாக எழுதியிருக்க வேண்டும்.
ஆய்வில், காண்பிக்கப்படாத விசைப்படகுகளுக்கு விற்பனை வரி விலக்கப்பட்ட டீசல் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி பதிவு சான்று ரத்து செய்யப்படும். ஆய்வு நாளன்று படகை ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் பின்னொரு நாளில் படகினை ஆய்வு செய்யக்கோரும் உரிமையாளா்களின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.
Image Caption
விசைப்படகுகள்