நல்லாடை அக்னீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 26th May 2023 05:32 AM | Last Updated : 26th May 2023 05:32 AM | அ+அ அ- |

அக்னீஸ்வரா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு நடைபெற்ற கும்பாபிஷேகம்.
தரங்கம்பாடி அருகேயுள்ள நல்லாடை ஸ்ரீசுந்தர நாயகி சமேதா ஸ்ரீஅக்னிஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பரணி நட்சத்திரத்துக்கு பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு பழைமை மாறால் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்காக மே 22-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி வியாழக்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, அனைத்து சந்நிதிகளிலும் தீபாராதனை நடைபெற்றது.