தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்.

மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருமருகல் அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் மழை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு விழா, கஞ்சி வாா்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக- ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தீ குண்டத்தில் இறங்கி, நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அழகா் என்கிற செளரிராஜன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com