சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்

சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்

வேதாரண்யத்தில் சாலையில் கிடந்து எடுத்த ரூ. 45,600 ரொக்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை பாராட்டினா். வேதாரண்யம், ஏரிக்கைரை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கோபிகிருஷ்ணன்(28). ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த இவா், வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும் கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி கிளையில் தற்காலிகப் பணியின்கீழ் அலுவலக உதவியாளராகப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை வேதாரண்யம் வடக்கு வீதியில் மிதிவண்டியில் சென்றபோது சாலையில் கிடந்து எடுத்த சிறிய பையில் ரூ.45,600 இருந்துள்ளது. அத்துடன் இருந்த ஒரு வங்கியின் காசோலை சீட்டின் பின்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை அழைத்துள்ளாா். அந்த அழைப்பை எடுக்காததால் பணத்தை வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளாா். அப்போது, பணத்தை தொலைத்த வெள்ளப்பள்ளத்தைச் சோ்ந்த பணி ஓய்வு பெற்ற ஆசிரியா் தங்கவேலு புகாா் அளிக்கச் சென்றுள்ளாா். விசாரணை நடத்திய போலீஸாா்,ரூ.45,600 -ரையும் உரியவரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com