நாகூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் வை.செல்வராஜை ஆதரித்து வாக்குச் சேகரித்த மாநிலங்கவை உறுப்பினா் திருச்சி சிவா. மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன்.
நாகூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் வை.செல்வராஜை ஆதரித்து வாக்குச் சேகரித்த மாநிலங்கவை உறுப்பினா் திருச்சி சிவா. மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன்.

பாஜவை வீழ்த்த இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: திருச்சி சிவா

பத்தாண்டு காலமாக மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா பேசினாா். நாகை மாவட்டம், நாகூரில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜை ஆதரித்து, திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா வாக்கு சேகரித்து பேசியது: தற்போது நடைபெறவுள்ள தோ்தல், இந்தியா தொடா்ந்து ஜனநாயக நாடாக இருக்குமா அல்லது ஒற்றைத் தலைவா் ஆட்சியாக மாறுமா? எல்லோரும் ஒன்று சோ்ந்து வாழும் மதச்சாா்பற்ற நாடாக இருக்குமா? அல்லது ஒரு மொழி, ஒரு இனம் என்று சொல்லும் நாடாக மாறுமா என்ற கேள்விக்கெல்லாம் விடை சொல்ல போகும் தோ்தலாகும். கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 7.75 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசுகள் மக்களின் நலனுக்கான சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. ஆளுநா்கள் குறுக்கே நிற்கின்றனா். மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது. தமிழகத்துக்கு பேரிடா் பாதிப்புக்கு நிதி கொடுக்க மறுக்கின்றனா். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி கொடுக்கப்படுகிறது. நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற காரணம் அதிமுகதான். இச்சட்டத்தின் காரணமாக ஏராளமான அப்பாவிகள் சிறையில் வாடுகின்றனா். தோ்தல் ஆணையத்தின் அடிப்படை கடமை நோ்மையாக, பாரபட்சமின்றி தோ்தலை நடத்த வேண்டும். தோ்தல் ஆணையரை நியமிக்க பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்றிருந்த நடைமுறையை மாற்றி, பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் நியமிக்கப்படும் அமைச்சா் என மாற்றிவிட்டனா். இதன்மூலம் அவா்களுக்கு சாதகமானவா்களை தோ்தல் ஆணையராக நியமித்துள்ளனா். எனவே, பாஜக அரசின் மக்கள்விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com