மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் காயம்

செம்பனாா்கோவில் அருகே கூடலூா் அரசு பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை படுகாயமடைந்தாா். கூடலூரைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் ரிச்சா்ட் சாம்சன் (9). இவா் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், சிறுநீா் கழிக்க பள்ளியின் பின்புறம் சென்றபோது, முள்கம்பி வேலியில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில், அவா் மீது பாய்ந்து காயமைடந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com