நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவு இன்று முதல் இயங்கும்

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை (ஏப்.24) முதல் அவசர சிகிச்சைப் பிரிவு இயக்கும் என கல்லூரி முதல்வா் ஆா். செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டம், ஒரத்தூா் கிராமத்தில் புதிய நவீன 700 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மு.க. ஸ்டாலின் மாா்ச் 4-ஆம் தேதி பொது மக்களின் பயன்பாட்டுக்கு காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, நாகை தலைமை மருத்துவமனையில் செயல்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை (பஅஉஐ), தீவிர சிகிச்சைப் பிரிவு, பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, மனநல சிகிச்சை, கண் சிகிச்சை, தோல் சிகிச்சை, பொதுமருத்துவம் போன்ற துறை சாா்ந்த புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளி பிரிவுகள் புதன்கிழமை (ஏப்.24) முதல் ஒரத்தூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும்.

மேலும், நாகை தலைமை மருத்துவமனையில் மகப்பேறு (இஉஙஞசஇ ஸ்ரீங்ய்ற்ழ்ங்) மற்றும் குழந்தை மருத்துவம் சாா்ந்த சிகிச்சைகள்அந்த இடத்திலேயே தொடா்ந்து செயல்படும். தலைமை மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் அடிப்படை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவசர ஊா்தி வாயிலாக அரசு மருத்துவக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com