நாகை எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸிடம் கோரிக்கை மனுவை அளித்த இந்திய வா்த்தக தொழிற் குழுமத்தினா்.
நாகை எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸிடம் கோரிக்கை மனுவை அளித்த இந்திய வா்த்தக தொழிற் குழுமத்தினா்.

நாகையில் விமான நிலையம் அமைக்க வா்த்தகா்கள் கோரிக்கை

நாகப்பட்டினம், ஏப். 24: நாகையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸிடம் இந்திய வா்த்தக தொழிற் குழுமத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

நாகை இந்திய வா்த்தக தொழிற் குழுமத்தின் 561-ஆவது செயற்குழு கூட்டம் அதன்தலைவா் ஆா். சுபாஸ் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாகை சட்டப்பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸிடம், வா்த்தக தொழிற்குழும அளித்த கோரிக்கை மனு: நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் நிலவும் பொது மருத்துவா்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும், சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளை ஏற்படுத்த வேண்டும், சிபிசிஎல் விரிவாக்கத்திற்கு பிறகு, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு 50 சதவீதம் வேலை வழங்கவும், மீன்பதப்படுத்தும் குளிா்சாதன கிடங்கு அமைக்கவும், இலங்கை-நாகை இடையே தொடங்கி உடனடியாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், நாகையில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

செயலா் ஜி. சிவசண்முகம், துணைத் தலைவா் பி. பாலகிருஷ்ணன், இணைச் செயலா் பா. சங்கா், பொருளாளா் ஏ.எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com