சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தரங்கம்பாடி தாலுகா, மேலப்பெரும்பள்ளத்தில் பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெல்ஸ்பன் நிறுவனம் மற்றும் மதா் தெரசா கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், மதா் தெரசா கல்வி அறக்கட்டளை திட்ட இயக்குநா் ராமா் தலைமை வகித்தாா். வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு அலுவலா் ஜூலியஸ் தூயமணி, ஸ்ரீமன் நாராயணன் , விக்னேஷ் ஆகியோா் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து பேசினா்.

இதில், நூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com