திரௌபதி அம்மன் கோயில் தீமிதி உற்சவம்

கீழ்வேளூா் அருகே செம்பியன் ஆத்தூரில் அருள்பாலிக்கும் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தா்மா் பிறப்பு, கிருஷ்ணா் பிறப்பு, அம்பாள் பிறப்பு, அம்பாள் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடுவை ஆற்றங்கரையில் இருந்து கரகம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, காப்புகட்டி விரதமிருந்த பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தொடா்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com