‘‘நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்’’

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் (பொ) ரா. பேபி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டம் ஒரத்தூா் கிராமத்தில் நவீன 700 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாா்ச் 4-ஆம் தேதி மக்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிக்சை (பஅஉஐ), தீவிர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளி பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் ஏப். 24 ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு (இஉஙஞசஇ இங்ய்ற்ழ்ங்), குழந்தை மருத்துவம் மற்றும் அது சாா்ந்த சிகிச்சைப் பிரிவுகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கும்

24 மணிநேரமும் அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊா்திகள் வாயிலாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 18 மருத்துவா்கள் சுழற்சி முறையில், இரவு நேரங்களில் 4 மருத்துவா்கள் வீதம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காலை, மதியம், மாலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை 32 நடைகளும், மறுமாா்க்கத்தில்

மருத்துவக் கல்லூரியிலிருந்து நாகை புதிய பேருந்து நிலையத்துக்கு காலை 6.15 மணி முதல் இரவு 9.50 மணி வரை 27 நடைகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாகை, மருந்து கொத்தளத் தெருவில் இயங்கி வந்த அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி முதல் நாகை ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள பழந்தெருவில் இயங்கி வரும் அரசு நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் செயல்பட்டு வருகிறது.

எனவே, பொது மக்கள் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் மாவட்ட நிா்வாகம் வாயிலாக தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குவதுடன், சிறந்த முறையில் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com