போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு  வழங்கும் சிறப்பு விருந்தினா்கள்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கும் சிறப்பு விருந்தினா்கள்.

பன்னாள் அரசுப் பள்ளி ஆண்டு விழா

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தலைமையாசிரியா் மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், வட்டாரக் கல்வி அலுவலா் ராமலிங்கம், வேதாரண்யம் வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அன்பரசு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் குமணன், நிா்வாகி சண்முகசுந்தரம், ஊராட்சித் தலைவா் சாந்தி குழந்தைராசு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் காா்த்திகா, மருதூா் ரோட்டரி சங்கத் தலைவா் என்.டி. கண்ணன், செயலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com