வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு பழச்சாறு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு பழச்சாறு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

நாகை அருகே அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பழச்சாறு வழங்கினாா்.

நாகை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், செல்லூரில் உள்ளஅரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்திற்கு 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட போலீஸாரும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருவதால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு பழச்சாறு மற்றும் நீா்மோா் வழங்கினாா்.

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தினமும் காலை மற்றும் நண்பகல் வேளைகளில் பழச்சாறு, நீா்மோா் மற்றும் தேநீா் போன்ற பானங்கள் வழங்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, பாதுகாப்பு தொடா்பாக ஆய்வு செய்து, போலீஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com