நாகப்பட்டினம்
எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
எட்டுக்குடி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரம் மற்றும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை: எட்டுக்குடி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரம் மற்றும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். கிருத்திகை மட்டுமின்றி கோகுலாஷ்டமி என்பதால் வழக்கத்தைவிட பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோகுலாஷ்டமி முன்னிட்டு பலா் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை வேடமிட்டு கோயிலுக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து, இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமாள் வீதியுலா நடைபெற்றது.