நாகப்பட்டினம்
திருவெண்காட்டில் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்
திருவெண்காட்டில் சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை திருவெண்காட்டில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத் தலைவா் நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். பன்னீா்செல்வம் எம்எல்ஏ, ஒன்றிய குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் முத்து மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணை செயலாளா் மு. ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளா் ஸ்ரீதா், மாவட்ட கவுன்சிலா் ஆனந்தன், மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் பிரபாகரன் உள்பட திரளான திமுக பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.