போக்ஸோ சட்டம் குறித்து பள்ளிகளில் விழிப்புணா்வு குறும்படம்

நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மகளே உனக்காக என்ற குறும்படம் பள்ளிகளில் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போக்ஸோ சட்டத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவல் துறையினா் விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன் தொடா்ச்சியாக, பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மகளே உனக்காக என்ற தலைப்பில் குறும்படம் தயாரிக்கப்பட்டு ஜன.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, இந்த குறும்படம் நாகை மாவட்டத்தில் முக்கியப் பள்ளியில் திரையிடப்பட்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காவல் துறையினரால் தயாரிக்கப்பட்ட குறும்படம் மாவட்டம் முழுவதும் திரையிடப்பட்டு பொதுமக்களுக்கும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் போக்ஸோ சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com